இந்திய உணவகத்தில் மூக்குமுட்ட சாப்பிட்ட டாம் குரூஸ்: டிப்ஸ் மட்டும் ரூ. 6,991

|

Tom Cruise Enjoying Indian Curry Meals

வாஷிங்டன்: ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் இந்திய உணவான சிக்கன் டிக்கா மசாலாவை விரும்பி சாப்பிட்டுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸிடம் இருந்து அவரது மனைவியும், நடிகையுமான கேட்டி ஹோல்ம்ஸ் அண்மையில் விவாகரத்து வாங்கினர். இந்நிலையில் புதிய படங்களில் நடிக்கும் டாம் குரூஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கு ஹாலிவுட்டில் உள்ள மேடியோஸ் உணவகத்தில் சாப்பிட்டுள்ளார். 2 நாட்கள் கழித்து லண்டன், புனித அல்பான்ஸில் உள்ள ஒரு உணவகத்தில் இந்திய உணவான சிக்கன் டிக்கா மசாலாவை விரும்பி சாப்பிட்டுள்ளார்.

அதன் பிறகு புனித பீட்டர் தெருவில் உள்ள இந்திய உணவகமான வீர் தாரா உணவகத்திற்கு அவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். டாம் குரூஸ் திடீர் என்று வந்ததில் அந்த உணவகத்தார் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அங்கு அவர்கள் மீன், சிக்கன் டிக்கா மசாலா, சாதம், மட்டன், லாப்ஸ்டர் ஆகியவற்றை சாப்பிட்டனர். ரூ. 19,411.29க்கு சாப்பிட்ட அவர்கள் ரூ. 6,991 டிப்ஸ் வைத்துள்ளனர்.

 

Post a Comment