டகுபதி ராணாவுடன் மீண்டும் த்ரிஷா காதல் - அடுத்த ஆண்டு திருமணம்?

|

The Reunion Trisha Raana Paves Star Weeding

தெலுங்கு சினிமாவில் இன்றும் முக்கிய இடத்தை வகிக்கும் த்ரிஷாவுக்கும் பெரிய இடத்துப் பிள்ளையான டகுபதி ராணாவுக்கும் மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

விரைவில் இருவரும் காதலை அறிவிக்கும் அளவுக்கு இவர்களின் நெருக்கம் அமைந்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டகுபதி ராணாவுடன் கிசுகிசுக்கப்படாத நடிகைகளே இல்லை எனும் அளவுக்கு அவர் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறார் டோலிவுட்டில்.

முதலில் அவருக்கும் த்ரிஷாவுக்கும் நெருக்கம் என்று செய்தி வந்தது. ஆனால் கொஞ்ச நாளிலேயே இருவரும் கருத்து வேறுபாட்டில் பிரிந்து விட்டதாகக் கூறப்பட்டது.

த்ரிஷா இடத்தில் அடுத்து வந்தவர் ஜெனிலியா. அவரும் நிலைக்கவில்லை. அடுத்து ஸ்ரேயாவும் ராணாவும் ஒன்றாகவே வசிப்பதாக செய்தி வந்தது. ஆனால் ஸ்ரேயாவோ, ராணா குடும்பத்தில் தானும் ஒருத்தி என்றும், ஆனால் ராணாவை ரகசியமாக திருமணம் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

கொஞ்ச நாள் கழித்து பிரபு தேவாவுடன் த்ரிஷா நெருக்கமாக இருப்பதாகக் கூறப்பட்டது. அந்த நேரத்தில், த்ரிஷாவின் முன்னாள் பாய் பிரண்ட் ஆன ராணாவுடன் நயன்தாரா நெருக்கமாக இருப்பதாக செய்தி வெளியிட்டனர்.

இப்போது ஒரு சுற்று முடிந்து, மீண்டும் த்ரிஷாவும் ராணாவும் இணைந்துள்ளனர். சமீபத்தில் இருவரும் தனிப்பட்ட முறையில் மிக நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்களாம் ஹைதராபாதில். இதற்காக ஒரு சினிமா ஸ்டில் போட்டோகிராபரையும் அழைத்துச் சென்றிருந்தார்களாம்.

இந்த முறை தங்கள் காதலை இருவரும் அறிவிக்கக் கூடும் என்கிறார்கள். அடுத்த ஆண்டு திருமணமாகும் நட்சத்திர ஜோடி பட்டியலில் த்ரிஷா - ராணாவும் இடம்பெறக்கூடுமாம்!

 

Post a Comment