நயன்தாரா நல்ல ஆத்மா என்றும், இருவரும் ஒரே தொழிலில் இருப்பதால் அடிக்கடி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாராவும், சிம்புவும் நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் திடீரென சந்தித்து பேசினர். நடிகர்-நடிகைகள் பலர் இந்த விருந்தில் பங்கேற்றார்கள்.
நயன்தாராவும், சிம்புவும் அருகருகே அமர்ந்து ஆழமாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவர்களைத் தனிமையில் விட்டுவிட்டு மற்றவர்கள் ஒதுங்கிப் போய்விட்டார்கள்.
நீண்டநேரம் இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டு இருந்தனர். உடைந்து போன காதலை அவர்கள் புதுப்பித்துக் கொண்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்து சிம்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "நயன்தாரா, ஒரு நல்ல ஆத்மா. நாங்கள் நண்பர்களாகதான் இருக்கிறோம். எங்களுக்குள் காதல் என்று சொல்வது முட்டாள்தனமானது.
நாங்கள் நடிகர்களாக உள்ளோம். ஒரே தொழிலில் இருப்பதால் எங்களுக்கிடையே பகிர்ந்து கொள்கிறோம். நட்பையும் பகிர்ந்து கொள்கிறோம். சினிமா சம்பந்தமான விழாக்களிலும் பேசிக்கொள்கிறோம். அவரவர் வேலையை செய்து கொண்டு இருக்கிறோம். நயன்தாரா அவரது வேலையை சிறப்பாக செய்கிறார். அவர் நலமுடன் இருக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
Post a Comment