ஃபேண்டா குடித்து தமன்னாவை சந்தித்த அதிர்ஷ்டசாலிகள்

|

Fanta S Behind The Label Winners Me

ஃபேண்டா லேபிலுக்குப் பின்னால் அதிர்ஷ்ட போட்டியில் வென்றவர்களு்ககு நடிகை தமன்னாவை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.

கொக கோலா நிறுவனத்தின் கூல்டிரிங்கான ஃபேண்டாவின் தென்னிந்திய பிராண்டு அம்பாசிடராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டார். நடிகை ஜெனிலியா திருமணமாகிப் போனதையடுத்து தான் தமன்னா பிராண்டு அம்பாசிடராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களைக் கவர ஃபேண்டா புது முயற்சியில் இறங்கியது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் லேபிலுக்குப் பின்னால் அதிர்ஷ்டம் என்ற போட்டியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது. 1.25 லிட்டர், 2 லிட்டர் அல்லது 2.25 லிட்டர் ஃபேண்டா பாட்டில்களின் லேபிலுக்குப் பின்னால் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் சில அதிர்ஷ்டசாலிகளுக்கு தமன்னாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அதிர்ஷ்டசாலிகள் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமன்னாவை சந்தித்து பேசினர். வெற்றியாளர்களுக்கு தமன்னாவுடன் பேசியது கனவா, நனவா என்று தெரியாமல் சந்தோஷத்தில் மிதந்தனர்.

வெற்றியாளர் ஒருவர் கூறுகையில்,

எனக்கு மி்கவும் பிடித்த நடிகை தமன்னா. அவரை நேரில் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்றார்.

 

Post a Comment