இயக்குநர் எம் சசிகுமார் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் புதிய படமான சுந்தரபாண்டியன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து பாராட்டியுள்ளார் இயக்குநர் பாலா.
போராளி படத்துக்குப் பிறகு சசிகுமார் நடிக்கும் புதிய படம் சுந்தரபாண்டியன். இந்தப் படத்தை எஸ் ஆர் பிரபாகரன் இயக்குகிறார். எஸ் ஆர் ரஹ்ந்தன் இசையமைக்கிறார்.
கும்கி படத்தில் நடித்த லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில் ஒரு நாள் படப்பிடிப்புத் தளத்துக்கு திடீர் விருந்தாளியாக வந்தார் இயக்குநர் பாலா.
செட்டிலிருந்த அனைவரும் அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். படம் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பாலா, படத்தின் ஹீரோவும் தனது முன்னாள் உதவி இயக்குநருமான சசிகுமாரை வெகுவாகப் பாராட்டினார்.
"ரொம்ப கஷ்டப்பட்டு ஜெயிச்சவன் சசி. என்கிட்ட இருந்தபோது, இவனுக்குள் இப்படியொரு வெறித்தனமான சினிமா ரசிகன் இருப்பான் என்று தெரியவில்லை," என்றாராம்.
Post a Comment