புது வருடப் பிறப்பு தொடங்கி, பொங்கல், தீபாவளி, போன்ற விஷேச நாட்களில் மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த தொலைக்காட்சிகள் தற்போது ஒரு விடுமுறையும் விடாமல் சிறப்பு நிகழ்ச்சிகளையும், புதிய திரைப்படங்களையும் ஒளிபரப்பத் தொடங்கியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சன் டிவி, விஜய் டிவி என பெரும்பாலான சேனல்களில் போட்டி போட்டுக்கொண்டு புதிய திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர்.
சன் டிவியில் காலையில் சந்திரமுகி, பிற்பகலில் விஜய் நடித்த சுறா, மாலையில் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக 3 ஆகிய படங்களை ஒளிபரப்புகின்றனர்.
விஜய் டிவியில் காலை 11 மணிக்கு வழக்கு எண் 18/9 திரைப்படமும், மாலை 6 மணிக்கு சிறுத்தை திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
இதைத் தவிர புதிய திரைப்படங்களின் சிறப்புக் கண்ணோட்டங்களும், நகைச்சுவை நடிகர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளும் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளில் ரசிகர்களுக்கு விருந்தாக ஒளிபரப்பாக உள்ளது.
கொழுக்கட்டையை சாப்பிட்டு விட்டு அப்படியே படத்தையும் பார்த்து ரசிங்கப்பா...!
Post a Comment