ஒரு வார்த்தை ஒரு லட்சம்: பாகன் ஸ்பெசல்!

|

Paagan Team Participates Oru Vartha

விஜய் டிவியின் ஞாயிறு காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒருவார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியில் இந்த வாரம் பாகன் திரைப்படக்குழுவினர் ஸ்ரீகாந்த், ஜனனி ஐயர், பாண்டி, சூரி ஆகியோர் பங்கேற்று விளையாடினார்கள்.

இது தமிழை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சி. 2 நிமிடத்தில் 5 சொற்களை கண்டுபிடிக்கவேண்டும். குறிப்புகள் எல்லாமே ஒரு சொல் குறிப்புகளாக இருக்கவேண்டும், இரண்டு சொற்களைச் சொன்னால் அது விதிமீறலாக கருதப்படும்.

முதலாவதாக ஸ்ரீகாந்த், ஜனனி ஐயர் விளையாடினர். ஜனனி குறிப்புகளைக் கொடுக்க ஸ்ரீகாந்த் கண்டுபிடித்தார். சிலை, இரும்பு, வரவு, நகம் பூமி என்ற 5 வார்த்தைகளை ஐம்பொன், காந்தம், செலவு, வளர்வது, வானம் என்ற குறிப்புகளைக் கொண்டு கூறி கண்டு பிடித்தார் ஸ்ரீகாந்த்.

அடுத்ததாக பாண்டியும், சூரியும் விளையாடினார்கள். பாண்டி குறிப்புகளைத் தர சூரி கண்டுபிடித்தார். 5 வார்த்தைகளில் நான்கினை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது.

இறுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் - ஜனனி ஜோடி 10,000 ஆயிரம் ரூபாய் பரிசாகத் தட்டி சென்றனர்.

விளையாட்டின் நடுவே பாகன் திரைப்படத்தின் சிறப்பு அம்சங்களைப் பற்றி பேசினார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தின் இயக்குநர் பாகன் படத்தில் வரும் மாகாளி, வெள்ளிங்கிரி கதாபாத்திரத்திற்கு சரியானவர்கள் பாண்டியும், சூரியும் தான் என்பதால் அவர்களை தேர்ந்தெடுத்தாக கூறினார்.

பொள்ளாச்சி கதை களத்திற்கு ஏற்ப அதே நேட்டிவிட்டியுடன் கோவை சரளா உள்ளிட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததாக கூறினார் இயக்குநர். நிகழ்ச்சியின் இடையே பாண்டியும், சூரியும் பாட்டுப்பாடி அசத்தினார்கள். ஒவ்வொரு சுற்றிலும் நகைச்சுவையுடன் குறிப்புகளை கூறி நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்றனர் பாகன் குழுவினர்.

 

Post a Comment