ராஸ் 3 படத்தில் ஈஷா குப்தாவை 20 நிமிடம் கிஸ்ஸடித்த இம்ரான் ஹஷ்மி

|

Emraan Hashmi Esha Gupta S 20 Minute Kissing Scene
மும்பை: சீரியல் கிஸ்ஸர் என்ற செல்லப் பெயர் கொண்ட பாலிவுட்டின் இளம் நாயகன் இம்ரான் ஹஷ்மி, ராஸ் 3 படத்தில் ஈஷா குப்தாவை 20 நிமிடங்கள் கிஸ்ஸடித்து புதிய முத்தப் புரட்சி படைத்துள்ளாராம்.

இம்ரான் ஹஷ்மியை புக் செய்யப் போகும் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் அவரது கால்ஷீட்டை விட அவரது 'வாய் சீட்டு'க்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள். அதாவது படத்தில் ஏதாவது ஏடாகூடமான முத்தக் காட்சியை வைத்துப் படத்திற்கு நல்ல விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். ஹஷ்மியும் சளைக்காமல் உம்மா கொடுத்தபடி இருக்கிறார். இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் ராஸ் 3 படத்தில் ஈஷா குப்தாவுக்கு மொத்தம் 20 நிமிடங்கள் முத்தம் கொடுத்து புதிய புரட்சி படைத்துள்ளாராம் ஹஷ்மி. இதுவரை எந்த நடிகைக்கும் இவ்வளவு நீண்ட நேரம் முத்தமிட்டதில்லையாம் ஹஷ்மி.

ஏற்கனவே ஜன்னத் 2 படத்திலும் கூட ஈஷாவுக்குக பெரியதொரு கிஸ் கொடுத்துள்ளார் ஹஷ்மி. அந்த வகையில் இருவரது உதடுகளுக்கும் ஏற்கனவே நல்ல 'முன் அனுபவம்' உள்ளது.

இதற்கு முன்பு சோஹா அலிகானுக்கு தும் மிலே படத்தில் ஒரு நீண்ட நேர முத்தம் கொடுத்திருந்தார் ஹஷ்மி. ஆனால் அதைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் ராஸ் 3 படத்தில் கொடுத்திருக்கிறாராம்.

இதுகுறித்து இயக்குநர் மகேஷ் பட் கூறுகையில், இப்படத்தின் முக்கியக் காட்சியே இம்ரான் கொடுத்திருக்கும் நீண்ட நேர முத்தக் காட்சிதான். இதை மராத்தான் கிஸ் என்று நான் சொல்வேன்.... என்றார்.

ஈஷாவின் உதடுகள் மரத்துப் போய் டம்மியாகி விடாமல் இருந்தால் சரித்தான் மகேஷ்...!
 

Post a Comment