சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி தயாரித்து இயக்கும் மலையாளப் படத்தில் நடிக்கிறார் அமிதாப்பச்சன்.
மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ரசூல் பூக்குட்டி, சவுன்ட் டிசைனராக உள்ளார். 'ஸ்லெம்டாக் மில்லினியர்' என்ற ஆங்கில படத்தில் சிறந்த சவுன்ட் டிசைனருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர்.
இவர் தற்போது சொந்தமாக மலையாளப் படமொன்றை தயாரித்து இயக்கியும் வருகிறார்.
இன்றைய தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி அதன் மூலம் ஐ.டி.துறையில் பணிபுரிபவர்களின் மன நெருக்கடிகளையும் பண்பாட்டு சீரழிவுகளையும் எடுத்து கூறும் வகையில் இப்படத்தை ரசூல் பூக்குட்டி தயாரித்து வருவதாக கூறி உள்ளார்.
இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் நடிக்கிறார். ஒரு பாகிஸ்தானியாக அவர் இந்தப் படத்தில் வருகிறார்.
இதுகுறித்து ரசூல் பூக்குட்டி கூறுகையில், "ஐ.டி. துறை மற்றும் அதன் பணியாளர்களின் நிலைதான் படத்தின் கரு. இப்படி ஒரு விஷயத்தை நாடறிந்த பெரிய நடிகர் மூலம் சொன்னால் நன்றாக இருக்கும் என்பதற்காகத்தான் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க திட்டமிட்டேன். கதையைக் கேட்ட அவர் முழு மனதுடன் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் நட்புறவையும் விளக்கும் கதை என்பதால் அமிதாப்பச்சன் இப்படத்தில் பாகிஸ்தானியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்," என்றார்.
Post a Comment