பிளேபாய் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெறப் போகும் முதல் இந்தியப் பெண் என்ற பெயரை சமீபத்தில்தான் பெற்றார் பூனம் பாண்டே. இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் டிரஸ்ஸை கழற்றிப் போட்டு விட்டு நிர்வாணமாவேன் என்று அறிவித்து அகில உலகப் புகழ் பெற்றவர் பூனம்.
இந்த இரு செக்ஸி அழகிகளும் சேர்ந்து டிவிட்டரைப் பாடாய்ப் படுத்தி வருகிறார்கள்.
சனிக்கிழமையன்று ஷெர்லின் சோப்ரா, தனது கவர்ச்சிகரமான படங்களைப் போட்டு விட்டார். இந்தப் படங்கள் ஏடாகூடமாக இருக்கும், பயந்து விடாதீர்கள் என்றும் ஒரு வார்னிங் மெசேஜையும் கொடுத்திருந்தார்.
இதைப் பார்த்த பூனம் பாண்டே, உடனே ஞாயிற்றுக்கிழமை காலாங்கார்த்தலேயே கவர்ச்சியை அள்ளி வீசினார் தனது டிவிட்டர் பக்கத்தில். இப்படி இருவரும் காலையிலும், மாலையிலுமாக அள்ளி வீசிய கவர்ச்சிக் களியாட்டத்தால் இருவரது ரசிகர்களும் ஏக குஷியாகி விட்டனர்.
இருந்தாலும் ஷெர்லினை விட இப்போதைக்கு பூனத்திற்குத்தான் ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளதாம். டிவிட்டரில் பூனத்தை பின்பற்றுவோர் எண்ணிக்கை 2,80,000 ஆக உள்ளது. அதேசமயம், ஷெர்லினுக்கு 1,20,000 பேர்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னவோ போங்கம்மா...!
Post a Comment