ஹாங்காங் படப்பிடிப்பு: ஹெலிகாப்டரிலிருந்து தவறி விழுந்து பிந்து மாதவி - பியா படுகாயம்!

|

Actresses Bindhu Madhavi Pia Injured At Hong Kong Shoot   

சென்னை: சட்டம் ஒரு இருட்டறை படத்துக்காக ஹாங்காங்கில் ஹெலிகாப்டரில் வைத்து ஷூட்டிங் நடந்த போது தவறி விழுந்து படுகாயமடைந்தனர் நடிகைகள் பிந்து மாதவியும் பியாவும்.

அவர்களுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.

விஜயகாந்த் நடித்து, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் தயாராகி வெற்றி பெற்ற `சட்டம் ஒரு இருட்டறை' படம், மீண்டும் தயாராகி வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த சினேகா பிரிட்டோ டைரக்டு செய்கிறார்.

இந்த படத்தில் தமன் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். பியா, பிந்து மாதவி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்தின் முக்கிய காட்சிகள் ஹாங்காங்கில் படமாக்கப்பட்டு வருகின்றன.

ஹாங்காங்கில் உள்ள லாஸ்வேகாஸ் என்ற பகுதியின் இரவு நேர அழகை ஒரு ஹெலிகாப்டர் மூலம் படமாக்கினார்கள். பியா, பிந்து மாதவி இருவரும் ஹெலிகாப்டரை பிடித்துக்கொண்டு தொங்குவது போன்ற காட்சியை படமாக்கியபோது, எதிர்பாராதவிதமாக இரண்டு பேரும் கீழே விழுந்தார்கள். அதில் இருவரும் படுகாயம் அடைந்தார்கள்.

ஹெலிகாப்டர் மிக குறைந்த உயரத்தில் பறந்ததால், இருவரும் உயிர் தப்பினார்கள். படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

பியா, பிந்து மாதவி இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை அளித்தனர். இருவரும் ஓய்வெடுத்தனர். அதன்பிறகு வேறு காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்ந்தது.

 

Post a Comment