'வேல்முருகன் போர்வெல்ஸ்'... தயாரிப்பாளராகிறார் காமெடியன் கஞ்சா கருப்பு!

|

Kanja Karuppu Turns Producer

நமக்குப் பிறகு வந்த சந்தானமே தயாரிப்பாளராகிவிட்டார்... நாம சும்மாருந்தா எப்படி என்று நினைத்துவிட்டாரோ என்னமோ... தயாரிப்புக் களத்தில் குதித்துவிட்டார் கஞ்சா கருப்பு.

வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற தலைப்பில் புதிய படம் தயாரிக்கிறார் அவர்.

பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘பிதாமகன்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. மதுரைக்காரர்.

அமீரின் ‘ராம்' படத்தில் 'வாழவந்தானாக' நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து, ‘சுப்பிரமணியபுரம்', ‘பருத்தி வீரன்', ‘சண்டக்கோழி', மிரட்டல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

காமெடியில் தனக்கென தனி இடம் பிடித்த கஞ்சா கருப்பு தற்போது கே.கே.பிலிம் இண்டர்நேஷனல் என்ற பெயரில் பட கம்பெனி தொடங்கி தயாரிப்பில் குதித்துள்ளார். அவர் எடுக்கும் முதல்படத்துக்கு ‘வேல்முருகன் போர்வெல்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.

கரணை வைத்து ‘மலையன்' என்ற படத்தை இயக்கிய எம்.பி.கோபி இப்படத்தை இயக்குகிறார். ‘அங்காடி தெரு' மகேஷ் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

முக்கிய வேடத்தில் கஞ்சா கருப்பும் நடிக்கிறார்.

 

Post a Comment