சென்சாரில் யு சான்று பெற்ற தாண்டவம்!

|

Thaandavam Gets Clean U   

யுடிவி தயாரிப்பில் விஜய் இயக்கியுள்ள தாண்டவம் படத்துக்கு சென்சாரில் அனைவரும் பார்க்கும் வகையிலான யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

விக்ரம் - அனுஷ்கா - எமி ஜாக்ஸன் - ஜெகபதிபாபு நடித்துள்ள தாண்டவம் படம் வரும் 28-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லண்டனில் அதிக நாட்கள் ஷூட்டிங் நடந்த தமிழ்ப் படம் என்ற பெருமை கொண்ட தாண்டவம், நேற்று சென்சார் குழுவினருக்குக் காட்டப்பட்டது.

இந்தப் படத்துக்கு எந்த கட்டும் கொடுக்காமல் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

நல்ல படம் என்று பாராட்டவும் செய்தார்கள் என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்தனர்.

செப்டம்பர் 28-ம் தேதி உலகம் முழுக்க 1000 அரங்குகளில் வெளியாகிறது தாண்டவம் திரைப்படம். தெலுங்கில் சிவதாண்டவம் என்ற பெயரில் அதே நாளில் வெளியாகிறது.

 

Post a Comment