அசின் 27 வது பிறந்தநாள் - அக்ஷய்குமார் வாழ்த்து

|

Asin Devoid Time Celebrate Her 27th Birthday   

மும்பை : பிரபல நடிகர் நடிகையர்கள் பிறந்தநாளை ஸ்டார் ஹோட்டலில் கொண்டாடுவார்கள். ஆனால் நடிகை அசின் தனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார்.

‘கில்லாடி 786' பட ஷூட்டிங்கில் மும்பை திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது. அதில் பிஸியாக உள்ள அசின் தனது 27-வது பிறந்தநாளை சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடினார். படத்தின் ஹீரோ அக்ஷய் குமார் பூங்கொத்து கொடுத்து அசினுக்கு வாழ்த்து கூறினார்.

பிறந்த நாளினை எளிமையாக கொண்டாடியது ஏன் என்று கூறிய அசின், டிசம்பர்மாதம் தன்னுடைய படம் ரிலீசாக இருப்பதால் அதற்காக தூக்கத்தை கூட தியாகம் செய்து நடித்து வருவதாக கூறியுள்ளார். பிறந்தநாளுக்காக லீவ் எடுத்தால் சூட்டிங் பாதிக்கப்படும் என்று கூறிய அசின், தன்னுடைய பெற்றோர் மும்பையில் தன்னுடனே வசித்து வருவதால் சூட்டிங் முடிந்த உடன் அவர்களுடன் சந்தோசமாக பிறந்தநாள் கொண்டாட உள்ளதாக கூறியுள்ளார்.

வேலை மேல அவ்ளோ பக்தியா அசின்?

 

Post a Comment