பிரபல டிவி தொடர் இயக்குநர் மனைவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது!

|

மும்பை,: பிரபல இந்தி டிவி தொடர் இயக்குநர் சுனில் அக்னிகோத்ரியின் மனைவி தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நாடு முழுவதும் பிரபலமான டிவி தொடர் ‘சந்திரகாந்தா'. தூர்தர்சனில் à®'ளிபரப்பான இந்த தொடரை இயக்கியவர் சுனில் அக்னிகோத்ரி. இவரது மனைவி அஞ்சலி அக்னிகோத்ரி(41). இவர்களுக்கு சித்தார்த்(21), ஆதிஷ்(19) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் மும்பை புறநகர் பகுதியான பாலி கில், ஹர் பகுதியில் வசித்து வருகின்றனர். அஞ்சலியும் மூத்த மகன் சித்தார்த்தும் நேற்று வீட்டில் இருந்துள்ளனர். பின்னர் சித்தார்த் ஜிம்முக்கு சென்றுள்ளார். மாலை 4 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது அம்மா, படுக்கையில் மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஞ்சலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த போலீசார், அஞ்சலியின் வீட்டை சோதனையிட்டனர். மாத்திரை பாட்டில் à®'ன்றை கண்டெடுத்தனர். 20 மாத்திரைகள் இருக்க வேண்டிய அந்த பாட்டிலில் 8 மாத்திரைகள் குறைவாக இருந்தன. அஞ்சலி அவற்றை சாப்பிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வீட்டில் இருந்து அவர் எழுதிய à®'ரு கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் தான் குடும்பத்தினர் அனைவரையும் மிகவும் நேசிப்பதாகவும் தனது சாவுக்கு யாருமே காரணமில்லை, எனக்கு இந்த வாழ்க்கையை வாழப் பிடிக்கவில்லை என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment