திருவள்ளூர்: முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் துவக்க விழா கடந்த 29ம் தேதி நடைபெற்றது. இதில் நகைசுவை நடிகர் கஞ்சா கருப்பு கலந்து கொண்டார்.
முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் துவக்க விழா கடந்த 29ம் தேதி இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது. முத்துப்பேட்டை ராமஜெயம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், முத்துப்பேட்டை ரோட்டரி சங்க தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் ராஜ் மோகன், பொருளாளர் சிதம்பர சபாபதி, மெட்ரோ மாலிக், துணை ஆளுனர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர் 'கஞ்சா' கருப்பு, நடிகர் சண்முக ராஜன், சரித்திரம், ராமேஸ்வரம் போன்ற படங்களின் தயாரிப்பாளர் நிஜாம் ராஜா மற்றும் சிங்கப்பூர் தொழிலதிபர் 'டத்தோ' ராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரவு நேரம் கடந்துவிட்டதால், விழாவில் சிறப்பு விருந்தினர்கள் சில நிமிடங்கள் மட்டுமே பேசினர்.
நடிகர் சண்முக ராஜன், தற்போது மதுரையில் நாடகக்கலை குழுவை நடத்தி வருகிறார். அவருடைய நாடகக்கலை குழு மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல நாடகங்களை அரங்கேற்றி வருகிறது.
முத்துப்பேட்டையில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நாடகம் ஒன்றை விரைவில் அரங்கேற்ற முடிவு செய்துள்ளதாக சண்முகராஜன் தெரிவித்தார். அந்த விழிப்புணர்வு நாடகத்திற்கான செலவுகளை விழாவில் கலந்து கொண்ட தொழிலதிபர் ராம் ஏற்று கொள்வதாக தெரிவித்தார்.
Post a Comment