நியூயார்க்: பிரபல டிவி நடிகை சோபியா வெர்கரா எம்மி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்தபோது அவரது உடை பின்னாடி கிழிந்து போய் விட்டது.ஆனால் டிரஸ் கிழிந்தது கூடத் தெரியாமல் அவர் போட்டுக்கு நிகழ்ச்சி முழுவதும் வளைய வந்தார்.
பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு முதலில் இதுகுறித்துத் தெரியவில்லை. எனது காதலர் நிக் லோபய்பான் முதலில் இதைப் பார்த்தார். பின்னர் என்னிடம் வந்து இப்படித்தான் டிரஸ் போடுவதா என்று கூறி கிழிசலை சுட்டிக் காட்டினார். எனக்கு அப்படியே நெஞ்சே அடைத்தது போலாகி விட்டது என்றார்.
டிரஸ் கிழிந்ததை சொன்னதோடு நில்லாமல் அதைப் புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம் நிக். தனிமையில் அதை சோபியாவிடம் காட்டி அவருடன் சேர்ந்து ரசிக்க இப்படிச் செய்தாராம்.
என்ன காமெடி என்றால், இந்த கிழிந்த உடையுடன்தான் சோபியா நிகழ்ச்சி முழுக்க வலம் வந்துள்ளார். கிழிந்த மேட்டர் தெரிய வந்தவுடன் விழா மேடைக்கு பின்பக்கமாகப் போன சோபியாவுக்கு இரண்டு பெண்கள் வந்து டிரஸ்ஸை சரி செய்ய உதவினராம்.
Post a Comment