நடிகர்கள கிண்டலடிச்சி நடிச்ச ஷிவ் ஹீரோ எதையும் காமெடியா எடுத்துக்கறாராம்... எடுத்துக்கறாராம்... அவரது மேரேஜ் பத்தி இப்ப கோடம்பாகத்துல பேச்சு வந்திருக்காம். சின்னவயசுலருந்து பழகின பிரியமானவர மேரேஜ் பண்ணப்போறதா நட்பு வட்டாராங்க சொல்றாங்களாம். ஆனா ஹீரோயினுங்க மாதிரி ஷிவ் ஹீரோ, 'மேரேஜ் நடக்குற எடம் சொல்லாமாட்டேன்'னு மறைக்கறாராம். நடிகைங்கதான் மவுசு குறைஞ்சிடும்னு மறுப்பாங்க இவரு எதுக்காக மறைக்கறாருன்னு நட்புவட்டாரங்க குழப்பத்துல இருக்காங்களாம்... இருக்காங்களாம்...
சைலன்ட் படை படத்தோட செகன்ட் பார்ட்ல சத்யமான உசர நடிகர் நடிக்கறாராம்... நடிக்கறாராம்... இதோட ஷூட்டிங் காட்டுபகுதில நடத்த முடிவு பண்ணி பட குழு போச்சாம். காட்டுபகுதிக்குள்ள யூனிட் நுழைஞ்சதும் அந்த பக்கத்துல இருக்க சமூக ஆர்வலருங்க ரவுண்டு கட்டிட்டாங்களாம். இங்க ஷூட்டிங் நடத்தகூடாதுனு ஆர்டர் இருக்குனு வாதம் பண்ணாங்களாம். ஆனா யூனிட்காரங்க முறைப்படி பர்மிஷன் வாங்கிட்டுதான் ஷூட்டிங் நடத்தறோம்னு சொன்னாங்களாம். கையில ஆர்டரோட இருந்த பட குழுவுக்கு அதிகாரிங்களும் சப்போட் பண்ணாங்களாம்... பண்ணாங்களாம்...
புயலடிச்சி ஓய்ஞ்சதுல சைலன்ட்டா தியேட்டர்காரங்க வசூல் பாதிச்சிடுச்சாம்... பாதிச்சிடுச்சாம்... கரை கடக்கப்போற புயல் அத சாய்க்கும், இத சாய்க்கும்னு அறிவிப்பு வந்த வண்ணமிருந்தச்சாம். இதுல பயந்துபோன சில தியேட்டர்காரங்க காட்சிகள ரத்து பண்ணிட்டாங்களாம். இன்னும் சில தியேட்டர்ல ரசிகருங்க கூட்டம் கம்மியா இருந்ததால காட்சிய ரத்து பண்ணிட்டாங்களாம். நல்ல வசூல்ல போன படங்ககூட புயல் பீதில படுத்திடுச்சாம். இதுலயிருந்து மீளனும்மா சீக்கிரமே வர்ற தீபாவளி ரிலீஸ்ல கல்லா கட்டினாதான் உண்டுனு தியேட்டர்காரங்க சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...
Post a Comment