நடிகர் சத்தியராஜ் நடித்த ‘அல்வா' ஸ்பெசல் அமைதிப்படை திரைப்படம் இன்று இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சன் டிவி வாரா வாரம் ஒரு திரைப்பட வாரத்தை கொண்டாடி வருகிறது. இந்த வாரம் இரட்டையர் வாரத்தின் இறுதிப் படமாக சத்யராஜின் அட்டகாசமான நடிப்பில் வெளியான அமைதிப்படை ஒளிபரப்பாகிறது.
முந்தானை முடிச்சு வந்த பிறகு எப்படி முருங்கைக்காய் பிரபமலானதோ அதேபோல அமைதிப் படை வந்த பிறகு தமிழ்நாடு முழுக்க அல்வா பேமஸ் ஆனது. அப்படி ஒரு தாக்கம் இந்தப் படத்தில் சத்யராஜ் பேசிய அல்வா வசனம்.
1994ம் ஆண்டு வெளியான அமைதிப்படை மணிவண்ணன் இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம். சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படம் மிகப் பெரிய ஹிட். கஸ்தூரியை மோசடியாக ஏமாற்றி வயிற்றில் பிள்ளையைக் கொடுக்க அவர் கொடுத்த அல்வா...அதை விட பிரபலமானது.படத்தின் கதை, வசனம், இசை என எல்லாமே பிரமாதம். அதிலும் சத்யராஜின் வில்லத்தனத்திற்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்தது ரசிகர்கள் மத்தியில்.
இப்படத்திற்கு இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதைப் பார்த்துதான் இரண்டாம் பாகமாக நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ என்ற பெயரில் மணிவண்ணன் தற்போது எடுக்கவிருக்கிறார்.
எனவே ரசிகர்களே கரண்ட் இருந்தால் இன்று இரவு 11 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் அமைதிப்படை படத்தை காணத்தவறாதீர்கள்.
Post a Comment