சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி பாணியில் நடிகர் 'மிர்ச்சி' சிவாவின் திருமணம் நடைபெறப் போகிறது.
‘சென்னை-28' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், ரேடியோ ஜாக்கியாக இருந்த சிவா. இதைத் தொடர்ந்து, ‘சரோஜா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். ‘தமிழ் படம்' என்ற படம் மூலம் கதாநாயகன் ஆனார். சுந்தர் சி. டைரக்ட் செய்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘கலகலப்பு' படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார். இப்போது தில்லுமுல்லு ரீமேக்கில் நடிக்கிறார்.
தில்லுமுல்லு வெளியானபோதுதான் ரஜினியின் திருமணம் நடந்தது. லதாவை காதலித்து மணம் புரிந்தார். தற்போது தில்லுமுல்லு ரீமேக்கில் நடித்து வரும் 'மிர்ச்சி' சிவாவின் திருமணமும் அதே பாணியில் நடைபெறவுள்ளது. இதுவும் காதல் திருமணமாம்.
ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, கடந்த ஐந்து வருடமாக காதலில் மூழ்கியுள்ளார் சிவா. பேட்மிண்டன் வீராங்கனையான பிரியாதான் சிவாவின் மனம் கவர்ந்தவர். இப்போது இவர்களது காதல் திருமணத்தில் வந்து முடிகிறது. நவம்பர் 15ம் தேதி சென்னையில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளதாம்.
அலட்டிக் கொள்ளாத கேஷுவல் காமெடியைப் பலமாக கொண்டு நடித்து வரும் சிவாவின் மனம் கவர்ந்த பிரியா தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாராம்.
Post a Comment