மும்பை: சல்மான் கான் நடித்த தபாங் 2 படம் ரிலீஸான ஆறே நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.
தபாங் படத்தின் இரண்டாம் பாகத்தை சல்மான் கான் மற்றும் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து இயக்கினார் அர்பாஸ் கான். இந்த படத்தின் மூலம் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் இயக்குனராகியுள்ளார். படம் கடந்த மாதம் 21ம் தேதி ரிலீஸ் ஆனது. கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ரிலீஸான படம் வெறும் 6 நாட்களிலேயே அதுவும் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலை அள்ளியுள்ளது.
படம் ரிலீஸான முதல் 3 நாட்களிலேயே ரூ.64 கோடி வசூல் செய்தது. சல்மானுக்கு போட்டியாக பெரிய நடிகர்களின் படம் எதுவும் ரிலீஸ் ஆகாததால் தபாங் 2 தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
முன்னதாக சல்மான், கத்ரீனா நடித்த ஏக் தா டைகர் படம் ரிலீஸான 5 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்தது. இந்திய சினிமா வரலாற்றிலேயே இத்தனை குறுகிய காலத்தில் ரூ.100 கோடி வசூல் செய்த முதலாவது படம் ஏக் தா டைகர் தான். இந்நிலையில் குறுகிய காலத்தில் ரூ.100 கோடி வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையை தபாங் 2 பெற்றுள்ளது.
இன்றைய தேதி வரை தபாங் 2 இந்தியாவில் மட்டும் ரூ.139.5 கோடி வசூல் செய்துள்ளது.
Post a Comment