யார் என்ன சொன்னாலும் கவலையில்ல... எனக்கு மலையாள ஹீரோயின்கள்தான் வேண்டும் என அடம்பிடிக்கிறாராம் நடிகர் விமல்.
பசங்க படத்தில் அறிமுகமானாலும், களவாணியில்தான் பளிச்சென்று தெரிந்தார் விமல். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஓவியா. மலையாளப் பெண் இவர்.
விமலின் அடுத்த படம் வாகை சூடவா. இதில் அவருக்கு ஜோடி இனியா. இவரும் மலையாள வரவுதான். அடுத்து நடித்த கலகலப்பு படத்தில் இவருக்கு ஜோடியாக இல்லாவிட்டாலும், ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார் ஓவியா. தொடர்ந்து இப்போது விமல் நடிக்கும் சில்லுனு ஒரு சந்திப்பு நாயகியும் ஓவியாதான்.
புதிதாக விமல் நடிக்க உள்ள களவாணி சற்குணத்தின் மஞ்சப்பை படத்தில் விமலுக்கு ஜோடி லட்சுமி மேனன். இவரும் மலையாள நாயகிதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
Post a Comment