சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான எடிசன் விருதுக்கு 28 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலிலிருந்து விருதுக்குரியவர்களை ஆன்லைன் மூலம் வாசகர்கள் தேர்வு செய்கிறார்கள்.
எடிசன் விருது வழங்கும் விழா கடந்த 5 ஆண்டுகளாக பிரமாண்டமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த விழாவில் விஜய், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய், அமலா பால், இனியா என தமிழ் திரையுலகமே திரண்டு வந்து பங்கேற்றது.
இந்த ஆண்டுக்கான எடிசன் விருதுகளுக்கு போட்டியிடும் 28 பேரப் கொண்ட பட்டியலை (Nominees) ஹோட்டல் பென்ஸ் பார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் வெளியிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் எடிசன் விருது குழு தலைவர் ஜெ செல்வகுமார் முன்னிலையில் தமிழ் திரைத்துறை சார்ந்த பிண்ணனிப் பாடகி சின்மயி, பாடலாசிரியர் நா. முத்துக்குமார், நடிகர் ஜெயபிரகாஷ், திரைப்பட பெண் இயக்குனர், லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை விஜி சந்திர சேகர், சின்னபொண்ணு, நடன இயக்குனர் பாபி உள்ளிட்டோர் மற்றும் ஆனந்த் திரையரங்கத்தின் உரிமையாளர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இனி விருதுக்குரியவர்களை இணையதளம் மூலம் ஓட்டளித்து வாசகர்கள் தேர்வநு செய்யலாம். இதற்கான தனி இணையதளத்தை நட்சத்திரங்கள் தொடங்கி வைத்தனர்.
பின்னர் வாக்குசீட்டு முறையில் வாக்கு பெட்டி மூலம் தேர்ந்தெடுக்கும் முறையை பாடலசிரியர், நா. முத்துக்குமார், நடிகர் ஜெயபிரகாஷ், நடிகை விஜி சந்திர சேகர் மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடன இயக்குனர் பாபி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று நன்றி தெரிவித்தார் எடிசன் விருது குழு தலைவர் ஜெ செல்வகுமார்.
Post a Comment