'தூங்கா நகரம்' கவுரவ் இயக்கும் 'சிகரம் தொடு' - ஹீரோ விக்ரம் பிரபு!

|

Thoonga Nagaram Gourav New Movie Sigaram Thodu

தூங்கா நகரம் படத்தை இயக்கிய கவுரவ், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கும் புதிய படம் சிகரம் தொடு. டிஸ்னி யுடிவி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

டிஸ்னி யுடிவி இப்போது சேட்டை என்ற படத்தை தமிழில் தயாரித்து வருகிறது. ஆர் கண்ணன் இயக்கும் இப்படம், டெல்லி பெல்லி என்ற இந்திப் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஆர்யா, பிரேம்ஜி, சந்தானம், ஹன்சிகா, அஞ்சலி நடித்து வருகின்றனர்.

இந்தப் படம் முடியும் தறுவாயில் உள்ளது. எனவே புதிய படத்தின் வேலைகளை ஜனவரி 2-ம் தேதி தொடங்கினர். தூங்கா நகரம் படத்தை இயக்கிய கவுரவ் இந்தப் புதிய படத்தை இயக்குகிறார். படத்துக்கு சிகரம் தொடு என பெயர் சூட்டியுள்ளனர்.

விக்ரம் பிரபு

கும்கி படத்தில் நடித்த விக்ரம் பிரபுதான் இந்தப் படத்தின் ஹீரோவாக நடிக்கிறார். இவன் வேறு மாதிரி என்ற படத்தில் இப்போது நடித்துவரும் விக்ரம் பிரபு, அடுத்து இந்த சிகரம் தொடு படத்தில் நடிக்கிறார்.

படத்தை இந்த மாதம் ஆரம்பித்து, ஆண்டின் இறுதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக டிஸ்னி யுடிவியின் தென்னிந்திய தலைமை அதிகாரியான தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment