சென்னை: ஒருவழியாக சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட இயக்குநர் குறித்த மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.
நாம் முன்பே கூறியபடி, இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் கேவி ஆனந்த் தானாம்.
கேவி ஆனந்த் கூறிய கதை ரஜினிக்குப் பிடித்துவிட்டதால், அவருக்கு மிகப் பெரிய சம்பளத்தைப் பேசி முடித்துள்ளதாம், ஏஜிஎஸ் நிறுவனம்.
வழக்கமாக எந்த நிறுவனத்திடமும் அட்வான்ஸ் வாங்குவதில்லை ரஜினி. படம் வெளியானதும் ஒரே செட்டில்மெண்டாக முடித்துக் கொள்வது அவர் வழக்கம். அதையும் மாற்றி, அவருக்கு பெரிய தொகையை அட்வான்ஸாகக் கொடுத்துள்ளதாம் ஏஜிஎஸ் நிறுவனம்.
மாற்றான் தோற்றாலும் கேவி ஆனந்தின் சம்பளத்தைக் குறைக்காமல், அவர் திருப்தி எனும் அளவுக்கு சம்பளம் பேசியுள்ளார்களாம்.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம். இந்த புதுப்பட அறிவிப்பு வெளியான பிறகுதான் ரஜினியின் கோச்சடையான் ரிலீஸ் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது!
+ comments + 2 comments
vijayku padam edugappa please
please vijay annaku dual role padam ondru kodugalan
Post a Comment