ஒய்.விஜயா மகளுக்கு சேலத்தில் இன்று 'டும் டும் டும்'!

|

Daughter Y Vijaya Tie The Knot Today

சேலம்: பழம்பெரும் நடிகை ஒய்.விஜயாவின் மகளுக்கு சேலத்தில் இன்று திருமணம் நடைபெறவுள்ளது.

ஒரு காலத்தில் வில்லத்தனமா, கவர்ச்சியா கூப்பிடு ஒய்.வி.யை என்று கூறும் அளவுக்குப் பிரபலமாக இருந்தவர் ஒய்.விஜயா. கமல்ஹாசனின் மன்மத லீலையில் அவரது ராங் நம்பர் கேரக்டர் வெகுவாகப் பேசப்பட்டது.

அதேபோல காக்கிச் சட்டையில் அவர் கமல்ஹாசனுன் போட்ட சிங்காரி சரக்கு ஆட்டமும் கிக்காக பேசப்பட்டது. பைரவி, ராஜாதிராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் 5 மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

இவருக்கு அனுஷ்யா என்ற மகள் உள்ளார். பிஇ படித்துள்ளவரான இவருக்கும், சேலத்தைச் சேர்ந்த ராய் ஆண்டனி என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. இந்தத் திருமணம் சேலத்தில் உள்ள சர்ச்சில் இன்று நடைபெறுகிறது.

27ம் தேதி மாலை ஆறரை மணிக்கு சென்னை ஆந்திரா கிளப்பிலும், இன்று மாலை சேலத்திலும் வரவேற்பு நிழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

 

Post a Comment