கஷ்டமா இருக்கு, என்னால முடியாது: ராம்லீலா ஷூட்டிங்கில் 'ஓ'வென்று அழுத தீபிகா

|

When Deepika Padukone Broke Down On Ram Leela

மும்பை: ராம்லீலா இந்தி படத்தில் நடித்து வரும் தீபிகா படுகோனே கடினமாக காட்சி அளிக்கப்பட்டவுடன் அதில் தன்னால் நடிக்க முடியாது என்று கூறி அழுதுள்ளார்.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தீபிகா படுகோனே ராம்லீலா என்ற படத்தில் நடித்து வருகிறார். செட்டுக்கு வந்த தீபிகாவிடம் பன்சாலி ஒரு காட்சியை விளக்கிக் கூறி அதில் நடிக்குமாறு தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட தீபிகா ஓவென்று அழுதுள்ளார்.

இந்த சீன் மிகவும் கஷ்டமாக உள்ளது. என்னால் நடிக்க முடியாது என்று கூறி அழுதுள்ளார். இதைப் பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பன்சாலி தீபிகாவை அழைத்து அவருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசியுள்ளார். மேலும் ஷூட்டிங்கையும் தள்ளி வைத்துள்ளார். இயக்குனரின் அறிவுரைகளைக் கேட்ட தீபிகா வீட்டுக்கு கிளம்பினார்.

மறுநாள் வந்து அதுவும் ஒரே டேக்கில் அந்த காட்சியை நடித்துக் கொடுத்து சபாஷ் வாங்கியுள்ளார் தீப்ஸ். இந்த படத்தில் கரீனா கபூர் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு திருமணம் ஆனதால் அந்த வாய்ப்பு தீபிகாவுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment