சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்.
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 'போலீஸ் கிரி' என்ற படத்தில் நடிக்கிறார் சஞ்சய் தத். இது தமிழில் ஹிட்டான 'சாமி' படத்தின் ரீமேக்.
இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. பொங்கல் திருவிழா சென்னையில் தமிழ் முறைப்படி கொண்டாடினார் சஞ்சய் தத்.
இந்த நேரத்தில் தனது வீட்டுக்கு வரும்படி ரஜினியிடம் இருந்து சஞ்சய்தத்துக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு சஞ்சய்தத் சென்றார். அவருடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் சென்றிருந்தார்.
சஞ்சய் தத்துக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றார் ரஜினி. பின்னர் இருவரும் நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து சஞ்சய்தத் கூறும் போது, "ரஜினி சாரை அவரது வீட்டில் சந்தித்தேன். சில மணிநேரங்கள் பேசினோம். அரசியல், இந்தி சினிமா போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.
நாங்கள் புறப்பட்டபோது ரஜினி சாருடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். ரஜினியின் மனைவி எனது குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்," என்றார்.
Post a Comment