தனுஷை வைத்து சற்குணம் இயக்கி வந்த சொட்டவாளக்குட்டி படத்தின் பெயரை நய்யாண்டி என மாற்றியுள்ளனர்.
களவாணி, வாகை சூட வா படங்களுக்குப் பிறகு சற்குணம் இயக்கும் படம் இது.
குத்துவிளக்கு கடை வைத்திருக்கும் பையனுக்கும், பல் டாக்டருக்குப் படிக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் காதல்தான் (நிஜத்துல சற்குணத்துக்கு வேண்டப்பட்டவர்கள் கதை மாதிரியே இருக்கே!) இந்தப் படத்தின் கதை.
எம் ஜிப்ரான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தயாரித்த கதிரேசன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. பரோட்டா சூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், சத்யன் ஆகியோரும் நடிக்கும் இந்தப் படத்துக்கு முதலில் சொட்டவாளக்குட்டி என பெயர் சூட்டியிருந்தார் சற்குணம்.
இப்போது, நய்யாண்டி என மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார்.
Post a Comment