பாலாவின் படங்களிலேயே பரதேசிதான் பெஸ்ட்! - 'அப்பா' பாலு மகேந்திரா சர்ட்டிபிகேட்!

|

Balu Mahendra Praises Bala Paradesi

சென்னை: பாலா இதுவரை இயக்கிய படங்களிலேயே பரதேசிதான் பெஸ்ட் படம் என்று பாராட்டியுள்ளார், இயக்குநர் பாலு மகேந்திரா.

பாலாவை எந்த மேடையிலும் தன் மூத்த பிள்ளை என்று கூறி சிலிர்ப்பவர் பாலு மகேந்திரா. பாலா தற்போது இயக்கியுள்ள ‘பரதேசி' படத்தை சமீபத்தில் 4 ப்ரேம்ஸ் அரங்கில் பார்த்துள்ளார் பாலு மகேந்திரா.

படம் பார்த்துவிட்டு, தன்னுடைய சாலிகிராமம் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாலாவிடம் படம் குறித்துப் பேசினாராம் பாலு மகேந்திரா. பேசிவிட்டு, இதுவரை பாலா இயக்கிய படங்களில் ‘பரதேசி'தான் பெஸ்ட் என்பது என்னுடைய எண்ணம் என்று கூறியுள்ளார்.

பொதுவாக எந்தப் படத்துக்கும் எடுத்த எடுப்பில் பாராட்டு தெரிவிக்க மாட்டாராம் பாலு மகேந்திரா. பாலா இதற்கு முன் இயக்கிய படங்களின் போதும் அப்படித்தானாம்.

ஆனால் முதல்முறையாக, பரதேசியைப் பார்த்தவுடன் பாராட்டியுள்ளார்.

 

Post a Comment