பிரபுவுக்கும், அபிஷேக் பச்சனுக்கும் என்ன ஒற்றுமை?

|

Prabhu Abhishek Bachchan

சென்னை: இளைய திலகம் பிரபுவுக்கும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது.

இளைய திலகம் பிரபுவின் தந்தை யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட சொல்லும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று. அத்தகைய பெரிய நடிகரின் மகனாகப் பிறந்த பிரபு தனது தந்தையைப் போன்றே நடிகரானார். தான் நடிக்க வந்த புதிதில் பல படங்களில் தனது தந்தையுடன் நடித்துள்ளார். அதன் பிறகு அவர் தனி ஹீரோவாக நடித்ததுடன், கமல், ரஜினி போன்ற பெரிய ஹீரோக்களுடன் சேர்ந்தும் நடித்துள்ளார்.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கேற்ப பிரபுவும் நடிப்பில் சிவாஜிக்கு சளைத்தவர் அல்ல. தனக்கென ஒரு இமேஜை உருவாக்கிக் கொண்டார். அவரின் கன்னக்குழி அழகு தனி அழகு தான். வயதான பிறகு அதற்கேற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பிரபு ஒரு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவரால் சிவாஜி என்ற சிகரத்திற்கு நிகராக வர முடியவில்லை.

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். பாவம் அபிகஷேக், அவரால் அவரது தந்தையைப் போன்று பெரிய நடிகராக வர முடியவில்லை. அவர் என்ன தான் நடித்தாலும் அமிதாப் போன்று வருமா என்று தான் பலர் கூறுகின்றனர். ஏற்கனவே ஒரு மலையின் நிழலில் இருந்து வெளியே வர முடியாமல் இருந்த அவர் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தார். அமிதாப் நடிப்பால் புகழ் பெற்றவர் என்றார் ஐஸ்வர்யா அழகால் உலகப் புகழ் பெற்றவர் ஆவார்.

இப்படி இரண்டு பெரிய ஆட்களுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கிறார் அபி. அபி என்ன தான் நடித்தாலும் அவருக்கு இன்னும் பெரிய பிரேக் கிடைக்கவில்லை.

 

Post a Comment