தமிழ்ப் பாடகி 'பாம்பே' ஜெயஸ்ரீ பெயர் ஆஸ்கருக்குப் பரிந்துரை- ரஹ்மான் வாழ்த்து

|

Bombay Jayashree Nominated For Life Of Pi

சென்னை: லைப் ஆப் பை படத்தில் இடம்பெற்ற தாலாட்டுப் பாடலை எழுதியதற்காக தமிழ்ப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஆஸ்கர் விருது வென்ற ஏஆர் ரஹ்மான் வாழ்த்து தெரிவித்தார்.

பிப்ரவரி மாதம் 24-ம் தேதி இந்த 85-வது அகாடமி விருதுகள் வழங்கப்படவுள்ளன. புதுவையை மையமாக வைத்து பிரபல இயக்குநர் ஆங்-லீ இயக்கியுள்ள 'லைப்-ஆப்-பை' திரைப்படம் 11 பிரிவுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் இசையமைப்பாளர் மைக்கேல் தன்னாவின் இசையில், தாலாட்டுப் பாடலைப் பாடிய பாம்பே ஜெயஸ்ரீயின் தமிழ் பாடலும் ஆஸ்கார் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை எழுதியவரும் ஜெயஸ்ரீதான் என்பது குறிப்பிடத்தக்கது.

"பைஸ் லுல்லாபை" என்ற இந்த பாடலுக்கு கனடாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் மைக்கேல் டேன்னா இசை அமைத்துள்ளார். இதே பாடலுக்காக இவர் சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தான் எழுதிய பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்‌யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாம்பே ஜெயஸ்ரீ, பாடல் எழுதுவது எளிதான ஒன்றுதான். ஒவ்வொரு தாயும் தனது குழந்தையை கட்டி தழுவும் போது அத்தாயின் உதடுகள் உச்சரிக்கும் வார்த்தைகளையே அந்த பாடலில் எழுதியுள்ளேன்," என்றார்.

 

Post a Comment