ஒருவழியா கல்யாணம் நடக்குமோ நடக்காதோ என்று நினைத்து சஸ்பென்ஸ் கூட்டிய சரவணன் அக்காவின் சவுந்தர்யாவின் திருமணம் நேற்று ஒருவழியாக முடிந்து விட்டது.
சரவணன் மீனாட்சி திருமணமே பரபரப்பான திருப்பங்களுடன் நடந்து முடிந்து தினம் ஒரு சண்டை, அப்புறம் அசத்தலான சமாதானம் என போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சரவணன் அக்காவிற்கும் மீனாட்சியின் அண்ணனிற்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்குமோ நடக்காதோ என்று இருந்து ஒருவழியாக எல்லோரும் சந்தோசப்படும் படியாக நடந்துவிட்டது.
பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக பல சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினார்கள். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டு மணிநேர சிறப்பு காட்சிகள் நேற்று ஒளிபரப்பானது. என்னதான் அதுல நடந்துச்சு நீங்களும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கீங்களா?
சரவணன் மீனாட்சிக்கு கல்யாணம்
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பெண் மீனாட்சிக்கும், சென்னையில் எப்.எம் ரேடியோவில் ஆர்.ஜே வாக வேலை பார்க்கும் சரவணனுக்கு பல மோதலுக்கும் பின் பிரம்மாண்டமாக கல்யாணம் நடந்தது.
திடீர் காதலுக்கு எதிர்ப்பு
சரவணன் அக்கா சவுந்தர்யா ஏற்கனவே விவாகரத்து பெற்று வீட்டில் இருக்கிறார். இவருக்கும் மீனாட்சியின் அண்ணன் தமிழ் மீது காதல் ஏற்படவே சரவணன் உட்பட குடும்பத்தினர் பலரும் எதிர்க்கின்றனர். இடையில் ஒருவழியாக சமாதானமாகி தமிழ் - சவுந்தர்யா திருமணம் நிச்சயமாகிறது.
இந்த ஜோடிக்கும் சண்டை
திடீரென்று பணப்பிரச்சினையில் சிக்கி கொள்வதால் திருமணத்தை தள்ளிப் போட நினைக்கின்றனர் தமிழ் குடும்பத்தினர். இந்த சூழ்நிலையில் தமிழ் - சவுந்தர்யா இடையே சண்டை ஏற்படவே இந்த ஜோடி முறைத்துக் கொள்கிறது. எல்லோரும் எதிர்க்கும் போது தமிழை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்த சவுந்தர்யா, குடும்பத்தினர் ஆதரவு கிடைத்த போது திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறாள்.
ஓடிப்போன சவுந்தர்யா
திருமணத்திற்கு முதல்நாள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு ஓடிப்போக முடிவு செய்கிறாள். அப்போது தமிழ் அதை பார்க்கவே சவுந்தர்யா விரும்பும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறான். ஆனால் சவுந்தர்யாவை வரச்சொன்ன பிரகாஷ் வராமல் போகவே ஏமாற்றமடைகிறாள் சவுந்தர்யா.
இன்னும் லவ் பண்றேன்
உடனே அவளைப் பார்த்த தமிழ் இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. நீ விரும்பினால் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். இன்னும் நான் உன்னைய காதலிக்கிறேன். இனியும் காதலிப்பேன் என்று கூறி அவளை வீட்டுக்கு அழைத்து வருகிறான். ஒருவழியாக இருவீட்டார் சம்மதத்தோட சவுந்தர்யாவின் கழுத்தில் தாலி கட்டிவிட்டார் தமிழ்.
அடுத்து என்ன நடக்கும்?
இந்த இரு ஜோடிகளின் திருமணம் பரபரப்பாக இருந்தது. அதுவும் சுபமாக முடிந்துவிட்டது. இனி போகும் வாரங்களில் கதையை எப்படி நகர்த்தப் போகிறாரோ இயக்குநர் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Post a Comment