ஒரே நேரத்தில் 7 படங்கள்... ஆனாலும் சொதப்பாத ஹன்ஸிகா!

|

Hansika S Professional Commitment   

தமிழ் சினிமாவிலேயே மிகவும் பிஸியான நடிகை இனந்த நிமிடத்தில் ஹன்ஸிகாதான்.

கையில் ஏழுபடங்கள். ஷிப்ட் முறையில் இரவு பகல் பார்க்காமல் ஷூட்டிங். பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்ஸி.

இந்த நிலையில் கால்ஷீட் கேட்டு மேலும் 4 பெரிய நிறுவனங்கள் ஹன்ஸிகாவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

இப்போது அவர் சுந்தர்.சி டைரக்ட் செய்து வரும் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் ஹூட்டிங்கில் சித்தார்த் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

சிம்புவுடன் வேட்டை மன்னன், வாலு, ஆர்யாவுடன் சேட்டை, கார்த்தியுடன் பிரியாணி, சூர்யாவுடன் சிங்கம் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஒரு படமும் போய்க் கொண்டிருக்கிறதாம்.

இத்தனைப் படங்களில் நடித்தாலும், ஹன்ஸிகாவின் ஸ்பெஷல்... இதுவரை ஒருமுறை கால்ஷீட் சொதப்பல் என புகார் கிளம்பியதே இல்லை என்பதுதானாம்.

'அதான் கமிட்மென்ட்... ப்ரொபஷனல்' என பாராட்டுகிறார்கள் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்!

 

Post a Comment