மதுரை: வடிவேலு மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. சந்தோஷமான விஷயம்தானே என்கிறீர்களா.. நியாயமாக வடிவேலு சந்தோஷப்படும் விஷயம்தான்.
ஆனால் அவரது அரசியல் பிரவேசம் எப்படி சினிமாவுக்கு முட்டுக்கட்டையாக அமைந்ததோ... அதேபோல இப்போது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவருக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வடிவேலுவின் மூத்த மகள் திருமணம் ஏப்ரல் 7-ந்தேதி மதுரையில் நடக்கவிருக்கிறது.
திருமணத்துக்கு பத்திரிகைக் கொடுப்பதில்தான் வைகைப் புயலுக்கு ஒரே குழப்பம். சினிமாக்காரர்களுக்கு மட்டும் கொடுத்துவிடலாமா... அல்லது அரசியல்வாதிகளுக்கும் கொடுக்கலாமா...
அப்படி கொடுத்தால் திமுகவுக்கு மட்டும் கொடுப்பதா... ஆளும் கட்சிக்காரர்களுக்கும் கொடுப்பதா?
திமுகவுக்கு மட்டும் என்றால்... உட்கட்சி பூசல் மிகுந்திருக்கும் இந்த நேரத்தில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தருவதா, கட்சிக்கு அழைத்துப் போன அழகிரிக்கு முக்கியத்துவம் தருவதா...
சினிமாவில் மறுபிரவேசத்தை ஆரம்பிக்கிற இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா கைப்புள்ள என மனசாட்சி கேள்வி எழுப்ப...
ஸ்ஸப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே என்று டென்சனில் இருக்கிறாராம் வடிவேலு!!
Post a Comment