கமல் ஹாஸனின் ஹாலிவுட் படத்துக்குப் பெயர் என்ன தெரியுமா?

|

Kamal Starts Work His Hollywood Movie

கமல் ஹாஸன் தனது ஹாலிவுட் படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார். லார்டு ஆப்தி ரிங்ஸ் படத்தைத் தயாரித்த பேரி ஆஸ்போன் தயாரிக்கும் இந்த பிரமாண்ட படத்துக்கு தற்காலிகமாக ஒரு தலைப்பும் வைத்துவிட்டாராம்.

விஸ்வரூபம் படத்தில் அமெரிக்காவையே காப்பாற்றும் இந்திய உளவாளியாக நடித்த கமலின் சிந்தனை பேரி ஆஸ்போனுக்கு ரொம்பப் பிடித்துவிட்டதால், தனது நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்கி நடித்துத் தருமாறு கமல்ஹாஸனைக் கேட்டிருந்தார்.

இதனால் விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்தை உருவாக்கும்போதே, இரண்டாம் பாகத்தையும் சேர்த்து ஷூட் செய்துவிட்டார் கமல். இந்த இரண்டாம் பாகத்தை இன்னும் மூன்றே மாதங்களில் வெளியிடவிருக்கிறார். தலைப்பு மூ. விஸ்வரூபத்தின் முதல் பாகத்தை வெளியிட இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட
கமல், இந்த இரண்டாவது பாகத்தை ஜூன் மாதம் வெளியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தனது ஹாலிவுட் பட வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் கமல். இந்தப் படத்துக்கு தலைப்பும் வைத்துவிட்டார்.

அது... 'ஆல் ஆர் கின்' (All Are Kin)...

இது கமல் ஏற்கெனவே தனது தமிழ்ப் படத்துக்கு தேர்வு செய்து வைத்த தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது!!

 

Post a Comment