காதல் காட்சியில் நடித்தபோது, நெருக்கத்தில் கருணாஸைப் பார்த்து பயந்துபோய் அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டாராம் நடிகை ஸ்வேதா பாசு.
சந்தமாமா படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடந்தது.
கருணாஸ், ‘சந்தமாமா' என்ற புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்வேதாபாசு நடிக்கிறார்.
இந்தப் பட ஷூட்டிங்கின்போது, ஒரு காட்சியில் ஸ்வேதா காதில் கருணாஸ் ரகசியம் சொல்வது போல் படமாக்கினர்.
அப்போது திடீரென நடிகை ஸ்வேதா பாசு கருணாஸை தள்ளிவிட்டார். இதனால் படப்பிடிப்புக் குழுவினர் பரபரப்பாக ஓடினர்.
ஏம்மா அவரைத் தள்ளிவிட்டே... என்று இயக்குநர் ராதாகிருஷ்ணன் நடிகையிடம் கேட்டார்.
அதற்கு, 'இவர் ரொம்ப நெருக்கத்துல வந்தார். முத்தம் கொடுக்கத்தான் வருகிறார் என பயந்து போய் தள்ளிவிட்டேன்," என்றார்.
உடனே கருணாஸ்... அய்யய்யோ... டைரக்டரே சொன்னாலும் நான் முத்தக் காட்சியில் நடிக்கமாட்டேன், நீ பயப்படாதே என்று போட்டாரே ஒரு போடு!
இது உலகமகா நடிப்புடா சாமி!!
Post a Comment