அன்னக் கொடியும் கொடி வீரனும் படத்துக்காக தான் ஆடு மேய்த்த கதையைத்தான் பார்ப்போரிடமெல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்கிறாராம் நடிகை கார்த்திகா.
அலைகள் ஓய்வதில்லை புகழ் ராதாவின் மூத்த மகள் கார்த்திகா. ‘கோ' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தன் அம்மாவை அறிமுகம் செய்த அதே பாரதிராஜாவின் இயக்கத்தில் அன்னக் கொடியும் கொடி வீரனும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
இதில் ஆடு மேய்க்கும் கிராமத்துப் பெண் வேடம் அவருக்கு. முன் பின் பழக்கமில்லாத வேலை என்றாலும், ஆடு மேய்க்க பயிற்சி எடுத்து நடித்தாராம் கார்த்திகா (நல்ல கோர்ஸா இருக்கே!)
படத்தில் நடிக்க ஒப்பந்தமானதுமே, ஆடுகளுடன் பழக்கம் இருக்கிறதா என்று கேட்டாராம் பாரதிராஜா. அதற்கு கார்த்திகா, ஆடுகளைத் தொட்டதுகூட கிடையாது என்று பதில் சொல்ல... "யாரங்கே... இந்தப் பொண்ணுக்கு ஆடு மேய்க்கும் பயிற்சியை ஒரு நாலு வாரத்துக்கு கொடுங்க..." என்றாராம்.
ஆடுகளை எப்படி மந்தையாக அழைத்துச் செல்வது, விசில் அடித்து ஆடுகளுக்கு எப்படி சைகை கொடுப்பது என அவர்களிடம் விலாவாரியாகக் கற்றுக் கொண்டாராம் ராதா மகள்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நடிக்கிறதை விட ஆடுமேய்ப்பது ரொம்ப கஷ்டம்னு தெரிஞ்சிக்கிட்டன். ஆனால் ரொம்ப இயல்பாக வந்திருப்பதாக இயக்குநர் கூறியபோது, என் கஷ்டத்துக்கு பலன் கிடைச்ச மாதிரி உணர்ந்தேன்," என்றார்.
Post a Comment