சுத்தத் தமிழ் தெரிந்த பெண் வேண்டும்! - நாக்க மூக்க இயக்குநரின் தேடல்

|

Pv Prasad S New Movie As Sagunthalavin Kadhalan

நாக்க மூக்க பாடலை ஏக பாப்புலராக்கிய படம் காதலில் விழுந்தேன். இந்த படத்தை இயக்கியவர் பிவி பிரசாத். காதலில் விழுந்தேன் படம் அவருக்கு பெரிய பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது.

அடுத்து இவர் இயக்கிய "எப்படி மனசுக்குள் வந்தாய்" படம், இயக்குநர் கிச்சாவுடன் சேர்த்து கோர்ட், கேஸ் என வேறு மாதிரி பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டது.

இப்போது பிரசாத் இயக்கி நாயகனாக அறிமுகமாகும் படத்திற்கு "சகுந்தலாவின் காதலன்" என்று பெயர் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சகுந்தலாவை தான் தேடிகொண்டிருக்கிறேன்..... சுத்தத் தமிழ் தெரிந்த பெண்தான் வேண்டும். நானே தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிப்பதால் பொறுப்புகள் அதிகம் என்பதால் தமிழ் தெரியாத பெண்ணை வைத்து கஷ்ட பட நேரம் இருக்காது," என்கிறார்.

காதலில் விழுந்தேன் படத்தில் "நாக்க முக்க", எப்படி மனசுக்குள் வந்தாய் படத்தில் "ஊராகாளி" என வித்தியாசமான் வார்த்தைகளை பாடல் வரிகளாக்கிய பிரசாத் சகுந்தலாவின் காதலன் படத்திற்காக புதிய வரிகளை தேடி கொண்டிருக்கிறார்!

 

Post a Comment