தலைப்பைப் பார்த்து ஏதோ நாம் திட்டுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். தன்னைத் தானே மிஷ்கின் வர்ணித்துக் கொண்டது இப்படித்தான். அதுமட்டுமல்ல... தான் புதிதாகத் தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இந்தப் பெயரைத்தான் சூட்டியுள்ளார்.
முகமூடி படத்துக்குப் பிறகு தான் இயக்கும் படத்துக்காக எந்தத் தயாரிப்பாளரையும் தேடிப் போகாத மிஷ்கின், தானே அதைத் தயாரிக்க முடிவு செய்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். நிறுவனத்தின் பெயர் லோன் வுல்ஃப்... அதாவது தனியான ஓநாய்!
ஏன் இந்தப் பெயர்...?
"அது என்னமோ... என்னை மிகவும் கவர்ந்த மிருகம் ஓநாய். அதன் குணங்கள் வித்தியாசமானவை. சுவாரஸ்யமானவை. பொதுவாக ஓநாய்கள் கூட்டமாக திரியும், கூட்டமாகவே வேட்டையாடும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் சில ஓநாய்கள் மட்டும் எந்த கூட்டத்துடனும் சேராமல் தன்னந்தனியே கம்பீரமாக வாழும். அவற்றைத்தான் 'லோன் வுல்ஃப்' என்று சொல்வார்கள். அதன் குணமும், வாழ்க்கை முறையும் எனக்குப் பிடிக்கும் என்பதால் அந்தப் பெயரை என் நிறுவனத்துக்கு வைத்துள்ளேன்.
எனது அடுத்த படத்தை என் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறேன். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். நல்ல தரமான படங்கள் என் நிறுவனத்தில் இருந்து வரும். திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்," என்றார்.
நரியோ ஓநாயோ.. மேலே விழுந்து பிடுங்காமல் நல்லவிதமாய்க் கடந்து போனாலே போதுமப்பா!!
Post a Comment