கோலாலம்பூர்: விஸ்வரூபம் படத்திற்கு எதிராக மலேசியாவில் விதிக்கப்பட்ட தடை இன்னும் நீக்கப்படவில்லை.
விஸ்வரூபம் படம் கடந்த 25ம் தேதி ரிலீஸாகவிருந்த நிலையில் அதில் முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி தமிழகத்தில் முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இதையடுத்து ஜனவரி 24ம் தேதி அன்று படத்தை 2 வாரத்திற்கு ரிலீஸ் செய்ய தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து பிற மாநிலங்களிலும், இலங்கையிலும் விஸ்வரூபத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் பிரச்சனை பேசித் தீர்க்கப்பட்ட பிறகு தமிழக அரசு தடையை நீக்கியது. இதையடுத்து கடந்த 7ம் தேதி படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆனது. தமிழகத்தை தொடர்ந்து பிற மாநிலங்கள் மற்றும் இலங்கையிலும் தடை நீக்கப்பட்டு படம் ரிலீஸானது.
ஆனால் படம் குறிப்பிட்டபடி ஜனவரி 25ம் தேதி மலேசியாவில் ரிலீஸானது. ரிலீஸான மறுநாளே படத்திற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இடைக்கால தடை விதித்தது. கடந்த மாதம் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிக்கைகள் எழுந்தபோதிலும் இன்னும் தடை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மலேசியாவில் உள்ள கமல் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
Post a Comment