ஹைதராபாத்: தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுக்கு ரஜினிகாந்தை லீடராக்கி பார்க்க ஆசையாக உள்ளதாம்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் சேகர் கம்முலா. டாலர் ட்ரீம்ஸ், ஆனந்த் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்தவர். அவர் ராணா டக்குபாத்தியை வைத்து எடுத்த படம் லீடர். கடந்த 2010ம் ஆண்டு ரிலீஸான இப்படம் சுமாராக ஓடினாலும் கதைக்காக பெரிதும் பேசப்பட்டது.
மேலும் சிறந்த கதைக்காக இப்படத்திற்கு நந்தி விருது கிடைத்தது. இந்நிலையில் கம்முலாவுக்கு ஒரு ஆசை ஏற்பட்டுள்ளது. தான் தெலுங்கில் எடுத்த லீடர் படத்தை தமிழில் ரீமேக் செய்து தானே இயக்க விரும்புகிறார். அவர் தன் படத்திற்கு ரஜினிகாந்தை ஹீரோவாக்க விரும்புகிறார்.
தெலுங்கு திரையுலகில் கம்முலாவின் படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் விருப்பமாக உள்ள நிலையில் அவர் கண்ணோ நம்ம சூப்பர் ஸ்டார் மேல் உள்ளது. ரஜினிகாந்த் என்ன சொல்லப் போகிறாரோ தெரியவில்லையே.
Post a Comment