மும்பை: விஸ்வரூப் படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூறியதாக கமல் ஹாசன் தெரிவித்தார்.
கமலின் விஸ்வரூபம் இந்தியில் விஸ்வரூப் என்ற பெயரில் கடந்த 1ம் தேதி வெளியானது. முன்னதாக விஸ்வரூப் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கமல் கடந்த மாதம் 31ம் தேதி சென்னையில் இருந்து மும்பை சென்றார். வெள்ளிக்கிழமை விஸ்வரூப் வெளியானவுடன் அதை பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகை ரேகா உள்ளிட்டோர் பார்த்தனர்.
படத்தைப் பார்த்த பிறகு சல்மான் கான் கூறியதாக கமல் தெரிவித்துள்ளதாவது,
சல்மானுக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது. படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக அவர் நினைக்கிறார். படத்தில் உள்ள அனைத்துமே அவருக்கு பிடித்துள்ளது என்றார்.
விஸ்வரூப் படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால் கமல் உற்சாகமாக உள்ளார். அதே சமயம் படத்தை தமிழில் வெளியிட காலதாமதம் ஆவது அவருக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று கூறப்படுகிறது.
Post a Comment