ரூ.1000 கோடி மோசடி புகார்: பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்த டெல்லி போலீஸ்

|

Cheating Case Power Star Srinivasan Arrested

சென்னை: ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.5 கோடி கமிஷன் பெற்றுக் கொண்டு டெல்லி தொழில் அதிபரை ஏமாற்றியதாக எழுந்த புகாரின் பேரில் பவர்ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

அடுத்தடுத்து மோசடி புகார். கோடிக்கணக்கில் கடன் வாங்கித்தர லட்சக்கணக்கில் கமிஷன் பெற்றுக் கொண்டு ஏமாற்றினார் என்பது பவர்ஸ்டார் சீனிவாசன் மீதான புகார்.

ஆந்திரா தொழிலதிபர் ஒருவருக்கு 20 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் கமிஷன் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் ஏப்ரல் 26ம் தேதி பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து புகார்கள் வரவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சீனிவாசன் மீது 6 வழக்குகள் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் புளு கோஸ் கட்டமைப்பு நிறுவனம் நடத்தி வந்த திலீப் பத்வானி என்பவர் சீனிவாசனை 1,000 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளார். அவரிடம் 5 கோடி ரூபாய் கமிஷன் தொகை வாங்கியுள்ளார் சீனிவாசன்.

ஆனால் வழக்கம் போல திலிப்பையும் பவர்ஸ்டார் ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக டெல்லி போலீசில் புகார் தெரிவித்தார் திலீப் இதனைத் தொடர்ந்து டெல்லி போலீசார் சீனிவாசனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபின்னர் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

 

Post a Comment