நாமக்கல்லில் பாடி பில்டிங் தொழிற்சாலை வைத்துள்ள குமார், சந்தித்ததும் சிந்தித்ததும் மூலம் ஹீரோவாக மாறியுள்ளார்.
சசிகுமார் நடித்த 'நாடோடிகள்' படத்தில் இடம்பெற்ற ஸ்ரீகௌரி அம்மன் இண்டஸ்ட்ரீஸ் லாரி பாடி பில்டிங் நிறுவனம் நாமக்கல் குமாரின் சொந்த கம்பெனி.
சிறு வயதிலிருந்தே நடிப்பு மீது இருந்த ஆர்வம், ‘நாடோடிகள்' படப்பிடிப்பைப் பார்த்தவுடன் அதிகமாகிவிட்டதாம். உடனே நடிப்பு, நடனம், சண்டைப் பயிற்சியை முறையாகக் கற்றுக் கொண்ட குமார், இயக்குனர் பாலு ஆனந்த் இயக்கும் ‘சந்தித்ததும் சிந்தித்ததும்' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
முதல் நாள் படப்பிடிப்பில் சுற்றியிருப்பவர்களைப் பார்த்து நடிக்கக் கூச்சப்பட்டாராம். உடனே இயக்குனர் பாலு ஆனந்த், "சுற்றியிருப்பவர்களை மறந்துவிடு. உன் முன்னால் கேமிரா இருப்பதையும் மறந்து விடு. இந்தப் படத்தின் கதை உண்மைச் சம்பவம். அதனால் அந்தக் கேரக்டராகவே மாறி, உணர்வுப்பூர்வமாக நடி," எனக் கூறி நடித்துக் காட்டினாராம்.
இந்தப் படம் வெளிவரும் முன்பே, ‘துப்பார்க்கு துப்பாய', ‘ரெண்டுல ஒண்ணு' ஆகிய படங்களிலும் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்துள்ளதாம் நாமக்கல் குமாருக்கு.
Post a Comment