ஹைதராபாத்: புதிதாக உருவாகும் தெலுங்கு படம் ஒன்றில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் சேர்ந்து நடிக்கின்றனர்.
ஒரே குடும்பத்திலிருந்து வந்த மூன்று தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த நடிகர் நாகேஸ்வரராவ் குடும்பத்துக்கு ‘அக்கினேனி' என்று பெயர். நாகேஸ்வரராவ், அவருடைய மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா என மூன்று தலைமுறையாக திரையில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.
இந்த மூன்று தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
நாகேஸ்வரராவ், அவருடைய மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா ஆகிய மூவரும் ‘மனம்' என்ற புதிய தெலுங்குப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
விக்ரம் குமார் இயக்கும் இப்படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைக்கிறார். நாக சைதன்யா ஜோடியாக சமந்தாவும், நாகார்ஜுனா ஜோடியாக ஸ்ரேயாவும் நடிக்கிறார்கள்.
பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஸ்ரேயாவுக்கு இந்தப் படம் மறு வாழ்வு அளித்துள்ளது.
அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை நேற்று ஹைதராபாதில் எளிமையாக நடந்தது. தெலுங்குத் திரையுலகினர் வாழ்த்தினர்.
Post a Comment