சென்னை: லிங்குசாமி தயாரிக்க, கமல் இயக்கவிருக்கும் புதிய படத்தில் மம்முட்டி ஹீரோவாகவும் கமல் முக்கிய வேடத்திலும் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வரூபம் 2 முடிந்த பிறகு ஹாலிவுட்டுக்குப் போய்விடுவார் கமல் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.
தமிழிலேயே அவர் மேலும் இரு படங்களை இயக்குவார் எனத் தெரிகிறது. விஸ்வரூபம் 2-க்குப் பிறகு அவர் லிங்குசாமி தயாரிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதனை அண்மையில் லிங்குசாமியே அறிவித்திருந்தார். இதில் கமல் நாயகனாகவும், காஜல் அகர்வால் நாயகியாகவும் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. லிங்குசாமியும் இதை மறுக்கவில்லை.
இந்நிலையில் இந்தப் படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டிதான் நாயகன் என்றும், கமல் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. லிங்குசாமியின் முதல் பட நாயகன் மம்முட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ 45 கோடியில் தயாராகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்களாம்.
பார்த்துங்க... மன்மதன் அம்புவில் ஓவியா நடிச்ச 'முக்கிய பாத்திரம்' மாதிரி இருந்திடப் போகுது!!
Post a Comment