மும்பை: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிஷப்த் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக பாலிவுட்டில் அறிமுகமானவர் ஜியா கான்(25). அவர் கடந்த 3 ஆண்டுகளாக படத்தில் நடிக்கவில்லை. பட வாய்ப்புகள் கிடைக்காததால் இன்டீரியர் டிசைனிங் படிக்க ஆசைப்பட்டுள்ளார். இந்நிலையில் காதல் தோல்வி, பட வாய்ப்புகள் இல்லாமல் விரக்தியில் இருந்த ஜியா நேற்று முன்தினம் இரவு மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தூக்கு போட்டுக் கொண்டதால் தான் மூச்சுத் திணறி இறந்தார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பே தனது கையை கிழித்துக் கொண்டு தற்கொலை முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஜியாவின் படுக்கையறையில் ஆயுர்வேத தூக்க மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஜியாவின் லேப்டாப், செல்போன்களை போலீசார் சோதனை செய்யவிருக்கின்றனர்.
Post a Comment