நான் விருது வாங்கியதைப் பார்க்க என் நெருங்கிய நண்பர் சித்தார்த் வராதது வருத்தத்தைத் தந்தது என்று சமந்தா கூறியுள்ளார்.
சித்தார்த்தும் சமந்தாவும் கிட்டத்தட்ட கணவன் மனைவி எனும் அளவுக்கு நெருக்கமாக உள்ளதாக செய்தி பரவியுள்ளது. இருவரும் எங்கும் இணைந்தே காணப்படுகிறார்கள்.
குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துவிட்டதால் விரைவில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் சமந்தாவுக்கு நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் நடித்ததற்காக சமந்தாவுக்கு இரு பிலிம்பேர் விருதுகள் கிடைத்தன.
விருது கிடைத்ததில் அவருக்கு பெரும் மகிழ்ச்சி என்றாலும், அந்த தருணத்தை நேரில் வந்து தனது காதலர் பார்க்கவில்லையே என்ற வருத்தம் சமந்தாவுக்கு நிறைய இருந்தது. அதை அவர் ட்விட்டரிலும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறுகையில், "நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய இரு படங்களிலும் சிறப்பான நடிப்பைக் காட்ட முடிந்தது. எனது இயக்குநர்களுக்கு நன்றி.
நான் விருது வாங்கிய விழாவில் சித்தார்த் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது என்று ட்விட்டரில் குறிப்பிட்டது பற்றி பலரும் பேசுகின்றனர். நான் எல்லோரிடமும் பாசமாக இருக்கிறேன். சித்தார்த் என் நெருங்கிய நண்பர். குடும்பத்தில் ஒருவர். எனவேதான் விழாவில் அவர் கலந்துகொள்ள வேண்டும் என எதிர்ப்பார்த்தேன்," என்றார்.
Post a Comment