மும்பை: ஷாரூக் தான் முதன் முதலில் குடியிருந்த வீட்டை வாடகைக்கு விட தீர்மானித்துள்ளாராம். வாடகை வெறும் ரூ3லட்சம் தானாம்.
ஆரம்பகாலத்த்ல் 3 படுக்கை அறைகள் கொண்ட வீட்டில் வசித்து வந்தார் ஷாரூக். இது மும்பை கார்டர் சாலையில் அமைந்துள்ளது.
ஷாரூக் தான் நடித்துப் பெற்ற சம்பாத்தியத்தில் வாங்கிய முதல் சொத்து இந்த வீடு தானாம். அதனால் அதனை விற்க மனதில்லாமல் மாத வாடகைக்கு விட தீர்மானித்துள்ளார் அவர். மாத வாடகையாக ரூ3 லட்சம் நிர்ணயித்துள்ளாராம். அட்வான்ஸ் ரூ 15 லட்சம்.
கடலைப்பார்த்த வண்ணம் ஸ்ரீ அம்ரித் அபார்ட்மெண்டில் ஏழாவது மாடியில் உள்ளது இந்த வீடு. ரூ3 லட்சத்திற்கு இதை விட பெரிய வீடே வாடகைக்கு கிடைக்கும் என்ற போதும், இது ஷாரூக் வீடு என்பது தான் ஸ்பெஷல் என்கிறார்கள் மும்பை வீட்டுத் தரகர்கள்.
மேலும் இந்த் வீட்டில் இருந்து தான் ஷாரூக் மிக உயர்ந்த அந்தஸ்திற்குப் போனாராம். அதனால் இது மிகவும் அதிர்ஷடமான வீடு என்றும் சொல்கிறார்கள் இவர்கள்.
Post a Comment